Tamil

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக வகைப்பொறுப்பு கூறுவதற்கும் அத்துடன் நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கும் ஏற்புடைய பிரச்சினைகளை இலங்கைகுள்ளேயே தீர்க்குமாறு இலங்கை உந்தப்பட்டுள்ளது.. 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அணுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனீவா பிரேரணையானது உண்மை, நீதி, இழப்பீடு செய்தல் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றை நோக்கிய அர்த்தபுஷ்டிமிக்க முதலாவது படிமுறையை தோற்றுவித்தது. இந்த பிரேரணையின் கீழ், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு,…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு இன்னமும் ஒரு மாதகாலத்திற்கு சற்றே அதிகமான காலப்பகுதியே இருக்கின்றது. இந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் ஹுசைன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆணைப்படி இலங்கை தொடர்பான தனது அறிக்கையை மார்ச் 22ஆம் திகதியன்று சமர்ப்பிக்கவுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நிலைமாற்று கால நீதியில் ஈட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை இலங்கை அரசாங்கம் முன்வைக்குமென…
இலங்கை, நல்லாட்சி ​அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்தை கடந்துள்ள இத்தருணத்தில் மனிதர்களுக்கெதிரான அட்டூழியங்கள் நிறைந்த குற்றச்செயல்கள் சார்ந்ததாக வகைபொறுப்புக்கூறுதல் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பரிகாரம் காணப்படுதல் சம்பந்தமாகவும் அக்கறைகொண்டவர்கள் இலங்கையின் அரசியலை முன்நகர்த்தும் விடயத்தில் புதுவிதமானதும் பல்வகைமையுடையதுமான பல சவால்களை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் 30/1 இலக்கமுடைய பிரேரணை ஊடாகவும் நீதி மற்றும் வகைப்பொறுப்பு ஆகிய விடயத்தில் ஐயப்பாட்டிற்கு இடமில்லாத வகையில் இலங்கை காட்டிய அப்போதைய அர்ப்பணிப்பு மூலமாகவும் வரலாற்று…
இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதி பற்றிய பேச்சுவார்த்தைகள் யாவுமே இதுவரைக்கும் காணாமற்போன நபர்களுக்கான அலுவலகம், விசேட வழக்குரைஞருடனான நீதிப் பொறிமுறை, உண்மை அறியும் ஆணைக்குழு மற்றும் திருத்தியமைத்தற் பணிகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நிலைநிறுத்த வேண்டியதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கள் பற்றிய நோக்காகவே முழுவதுமாக இருந்துவந்துள்ளது. ஆனால், நிலைமாற்றுக்கால நீதியின் மூலாதாரக் கூறாக உள்ளதான பாதுகாப்புத் துறையினரின் மறுசீரமைப்புப் பற்றி துரதிஷ்டவசமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் கருத்திற்கொள்ளவில்லை. OISL அறிக்கையின் பரிந்துரைகள் பட்டியலிலே பாதுகாப்புப் படையினரின்…
இலங்கை தேசிய ஒற்றுமைக்கும் நல்லுறவுக்குமான ஜனாதிபதி அலுவலகத்தின் ஒரு அங்கத்தவரான ராம் மாணிக்கலிங்கம் அண்மையில் ஒரு கட்டுரையிலே தமிழரின் சுயாட்சி பற்றிய விடயம் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தினுள் முறைப்படுத்தப்படும் வரைக்கும், திரளான குற்றச்செயல்களையிட்ட பொறுப்புக்கூறலை இலங்கை முன்னுரிமைப்படுத்தக்கூடாதெனவும், அத்துடன் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் சர்வதேச ஆர்வலர்கள் ஏனைய நல்லுறவுக்கான வடிவங்களுக்கு மேலாக யுத்தக் குற்றச்செயல்கள் விசாரணைக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும் எனவும் வாதித்துள்ளார். மாணிக்கலிங்கத்தின் கட்டுரையானது நிலைமாற்றுக்கால…
இலங்கை பற்றி வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தருவிப்பதாய் உள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே உயர்ஸ்தானிகர் செயிட்டால் ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டபோது நான் மனித உரிமைகள் பேரவையிலே பிரசன்னமாகியிருந்தேன். இலங்கைக்கு எதிராக வலிமையான ஒரு பிரேரணைக்கு இலங்கையை இணங்கச்செய்ய அழுத்தம் கொடுக்கும்படி நாடுகளிடையே பரப்புரை செய்யும்படியாக பிரசன்னமாகியிருந்த பாதிக்கப்பட்டோர்களிடையே பெருகிய உணர்வலைகள் வெற்றியையும் ஆறுதலையும் விளைவாக்கியது;…
இலங்கை மீதான ஐக்கிய நாடுகளால் நடாத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. போரின்போது இரு தரப்பினராலும், போரின் பின்பு அரசாலும் இழைக்கப்பட்ட அநீதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அறிக்கை வெளியீடு ஒரு மாபெரும் வெற்றி. இருந்தாலுங்கூட, நடந்த அநியாயங்களிற்கான பொறுப்புக்கூறல் என்ற விடயத்திலே தமிழ் மக்கள் மத்தியிலே இன்று பெரும் குழப்பநிலை தோன்றியிருக்கின்றது. இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும்…
ஐக்கிய அமெரிக்க அரசின் இரு உயர் அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினோவ்ஸ்கி ஆகியோரின் அண்மைய இலங்கை விஜயம் அது இடம்பெற்ற காலகட்டத்தை நோக்கினால் முக்கியமானதாகும். மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனீவாவிலே இடம்பெறுவதற்கு ஒருசில வாரங்களே உள்ள நிலைமையிலே அவர் விடுத்துள்ள கருத்துக்கள் இலங்கைக்குள்ளும் வெளியேயும் முக்கியமான கண்டனக் கண்ணோட்டங்களை எழுப்பியுள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசு செப்டெம்பரிலே இடம்பெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலே ஒரு தீர்மானத்தை…
‘மிருசுவில் படுகொலைகள்’ என அறியப்பட்ட வழக்கில் மேல் நீதிமன்ற ட்ரயல் அற் பாரின் அண்மைய குற்றத் தீர்ப்பும் மற்றும் சார்ஜன்ட் சுனில் ரட்னாயக்கவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும் தீவிரத் தேசியவாத சிங்கள பௌத்த கும்பல்களின் முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஆவேசமான சீற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அரச இயந்திரத்தினுள் இருந்து ஒரு சுவாரசியமான பதிலிறுத்தலே இதற்கு வெளிப்பட்டது. இந்தத் தீர்ப்பு, மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கு இலங்கை சட்ட முறைமையின் செயற்றிறனை வெளிப்படுத்துவதாக…
உலகின் பல பாகங்களிலே ஊடக சுதந்திர தினமானது தமது ஊடகப்பணியை ஆற்றும்போது கொலையுண்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதால் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அப்படிப் பலியானவர்களின் தொகையானது எனது பேச்சிலோ இப்படியான ஒரு நிகழ்விலோ குறிப்பிட்டுச் சொல்லிமுடியாதபடிக்கு அதிகமானதாகும். இங்கு அமர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் இன்றும் அதேபோன்ற ஆபத்துக்குத் தொடர்ந்தும் முகங்கொடுத்தும் வருகின்றனர். இருண்ட காலகட்டங்களிலுங்கூட பாதுகாக்கப்பட்டு வந்துள்ள தொழிற்துறையில் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியிலே, பெரும் விலை கொடுத்த இந்தப் பிராந்தியத்தைச்…
மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார். இலங்கையிலே இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களையிட்ட நீதி மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் அந்த அவதானிப்புக்களை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். பப்லோ டீ கிறீப் என்பவர் நிலைமாற்றுக்காலநீதியிலே பிரசித்திபெற்ற நிபுணர் என்பதால்…
கடந்த வாரத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஸெய்ட் என்பவர், மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் பற்றிய அறிக்கையை ஏற்கனவே வகுத்தபடி மார்ச் 2015 இலே வெளியிடாமல் அதைத் தாமதித்து செப்டெம்பரில் வெளியிடும்படியாகப் பரிந்துரைத்துள்ளார். இந்தத் தீர்மானமானது இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியே கடும் திருப்தியின்மையைத் தோற்றுவித்துள்ளது. ஒரு சிலர் இந்தத் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிக்கும் அளவுக்கும் சென்றுள்ளனர். இலங்கையில்…
ராஜபக்‌ஷ ஆட்சியின் வீழ்ச்சியானது பல புதிய ஆரம்பங்களுக்கு நம்பிக்கைச் சமிக்ஞை காட்டியுள்ளது. இந்த நம்பிக்கைகளுள் ஒன்றுதான் போர்க் காலகட்டத்தில், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களிலே முன்னெப்போதுமிருந்திராத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தின்போது மனித உரிமைகள் மற்றும் யுத்தவிதிகளின் மீறுதல்கள் பற்றி இப்போதாவது நாடு நம்பத்தகுந்த அளவுக்கு உள்நாட்டிலே கவனத்திற்கொள்ளும் என்பது. ஜனாதிபதி சிறிசேனாவின் தேர்தல் பரப்புரையின்போது அவரும் அவரது கட்சியினரும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான மாற்றீடாக உள்ளூர் பொறிமுறை பற்றி பேசி வந்திருந்தாலுங்கூட, அத்தகைய…
மனித முன்னேற்றமானது தானாகவே நிகழ்வதுமல்ல, தவிர்க்க முடியாததுமல்ல. நீதிக்கான ஒவ்வொரு படிமுறையும் அதற்கென அர்ப்பணித்த தனிநபர்களின் தியாகங்கள், வேதனைகள், தத்தளிப்புக்கள், சோர்ந்திடாது விடுக்கும் அழுத்தங்கள் மற்றும் பரிவுநிறைந்த கரிசனை போன்றவைகளை வேண்டிநிற்கும். மார்டின் லூதர் கிங், ஜூனியர் கடந்த வார ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் எதிர்பாராத ஒன்றாவே​ அமைந்தது. அந்த திடீர் மாற்றமானது சிறிசேனவுக்கு தம் வாக்குகளை அள்ளிக்கொடுத்த தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவித பிரதிபலனை கொண்டுவரும்…